புதுக்கோட்டையில் இயங்கி வரும் கவிதைப் படைப்பாளிகளுக்கான கவிஞர் மன்றம்.
கடந்த 07.07.2013 ஞாயிறு மாலை இம்மன்றத்தின் திங்கள் கூட்டம் கவிஞர் மீரா.சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் முன்னிலையேற்றார். கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் அவர்கள் வந்திருந்த படைப்பாளிகளை வரவேற்றார்.
பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் படைப்பாளிகளின் சமூகக் கடமைகள் பற்றித் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார். மாற்றம் எனும் இசைப் பாடலுடன் அவர் கவித்தேரின் வடக்கயிற்றைத் தொட்டிழுக்க கவிஞர்கள் கவிச்ரங்களைத் தொடுத்து கவித்தேர் ஊர்வலத்தை அழகுறுத்தினர்.
மாற்றம் - இசைப்பாடல் - பாவலர் பொன்.க
மாறுமுன்னு சொன்னீகளே மண்ணெல்லாம் பொன்னாக
மணக்க வாக்குத் தந்தீகளே மல்லிகைப்பு செண்டாக
மறக்கணுன்னு நெனைச்சோமே மண்டியிட்டுக் கெடந்ததெல்லாம்
மறக்கவும் முடியலையே மண்ணும் பொன்னா மாறலையே.
மாறலைன்னு சொன்னதிங்கே யாருங்க - எல்லாம்
மாறிப்போச்சு மேலும்கீழும் தானுங்க
மணக்கலேன்னு சொன்னவங்க யாருங்க - ஊழல
மலிஞ்சுபோயி மணக்குதெங்கும் தானுங்க -- மாறலைன்னு
பாலும் தேனும் இங்கே ஆறா ஓடுமுன்னு
வாக்குக்கேக்க வந்தவங்க பேச்சுங்க
பாட்டாளி தாகத்துக்குப் பச்சத்தண்ணி கூட இப்பப்
பன்னாட்டு மூலதனம் ஆச்சுங்க
சேத்துல வெளைஞ்சதெல்லாம் சோத்துக்கு மாத்துகிற
பாத்தியமும் அந்நியருக் காச்சுங்க
ஏத்துன வெலவாசி எறங்குமா என்பதெல்லாம்
காத்துல பறந்தபஞ்சு ஆச்சுங்க --- மாறலைன்னு
மதுக்குடிச்சா மதியழிஞ்சு மானங்கெட்டுப் போகுமுன்னு
மதுஒழிக்கப் போராடுன நெலைஒன்னு
மானங்கெட்ட வருவாயில மதுக்கடைங்க பெருகவச்சு
மாணவனும் கெட்டுப்போன நெலைஎன்ன?
வெள்ளரிக்கா வித்தகாசும் வெளிநாடு போச்சுதுன்ன
வீக்கம்வரும் பணத்துக்குன்னு சொன்னாங்க
வெளிநாட்டு வங்கிகளில் நம்நாட்டுக் கொள்ளைப்பணம்
கறுப்புவெள்ளையா மாறிக்கெடக்கு பாருங்க ---மாறலைன்னு
கார்கில்லு சவப்பெட்டி காமன்வெல்த் ஆதர்சு
ஸ்பெக்ட்ரம் நிலக்கரியும் கிரானைட்டும்
கெணறுவெட்டக் கௌம்பிவந்த புதம்விட்டக் காத்தைப்போல
ஹெலிகாப்டர் ஊழல்களும் நாறுது
வாய்மையே வெல்லுமென்னும் வாசகத்தின் கீழிருந்து
ஆள்வோர்கள் அறவழிக்கு மாறணும்
வாழும்மக்கள் வறுமைநீக்க வாய்ப்பான செயலுபட்டு
வளமான நாட்டை முன் னேற்றணும்.
மாறிப்போகும் எல்லாம்அப்பத் தானுங்க -மக்கள்
மனசுவச்சா மாற்றம் உருவாகுங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக